கொத்தமல்லி அனேகமாக உலகின் அனைத்து நாடுகளின் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக இருக்கிறது. இந்த கொத்தமல்லியின் விதைகள் நமது நாட்டில் தனியா என அழைக்கப்படுகின்றன, இந்த தனியாவும் கொத்தமல்லியை போன்று பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாக இருப்பதால், நமது நாட்டின் உணவு தயாரிப்பு மற்றும் மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய தனியாவை பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடலில் அத்தியாவசிய சத்துக்கல்ளின் குறைபாடுகள் ஏற்படுவதால், வயதாகும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுகள் வலுவிழப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. தினமும் 150 மில்லி தண்ணீரில் 3 கிராம் தனியாவை போட்டு கொதிக்க வைத்து, பருகி வந்தால் ஆஸ்டியோபொரோசிஸ், எலும்பு மூட்டுகள் பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

சாப்பிட்ட உணவுகள் நன்றாக செரிமானம் ஆவதற்கு தனியா மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதில் இருக்கும் போர்னியால் மற்றும் லினாலூல் சத்துக்கள் செரிமான திறனை அதிகப்படுத்துகின்றன. தனியாவில் லிமோனின், சினியோல், பீட்டா பிலாண்டரின் மற்றும் ஆல்ஃபா பினின் வேதிப்பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் இருக்கின்ற நுண்ணிய பாக்டீரியாக்களால் சீதபேதி போன்ற கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது. செரிமான உறுப்புகளில் இருக்கின்ற தீங்கு விளைவிக்கின்ற நுண்ணிய பாக்டீரியாக்களையும் தனியாவில் இருக்கும் இந்த வேதிப்பொருட்கள் அழிக்கிறது.

பொதுவாக மழைக்காலங்களில் பலருக்கும் மெட்ராஸ் ஹை எனப்படும் கண் நோய் ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் கஞ்சைக்டிவிட்டிஸ் என அழைப்பார்கள். தனியாவில் இந்த கஞ்சைக்டிவிட்டிஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. தனியாத் தூள் கலந்த நீரை நன்கு கொதிக்க வைத்து இதமான சூட்டில் ஆற வைத்து, அந்த நீரைக் கொண்டு கண்களில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளை சுத்தப்படுத்த பயன்படுத்தி வந்தால் கண் தொற்று நோய்கள் மற்றும் கண் வீக்கம் போன்றவை எளிதில் குணமடைகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin