சுண்டைகாய் கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி ஆகும். சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நமது நாட்டின் வீட்டு தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை செடி வளர்கிறது. சுண்டை காய்கள் பழங்காலம் முதலே நமது நாட்டு மருத்துவத்தில் பயன்படுதப்பட்டு வருகிறது. அந்த சுண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நமது வயிறு என்பது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து நமக்கு சத்து அளிக்க உதவும் ஒரு உறுப்பாகும். நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை சிலர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.

ஒரு நாளில் மொன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் பசி உணர்வு ஏற்படுவதே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த அறிகுறியாகும். சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பசி உணர்வு குறைந்து விடும். சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும். பலருக்கும் ஏதேனும் ஒரு காரணத்தால் சமயங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, சீதபேதி நிற்கும்.

கண்ட கண்ட நேரங்களில் அதிகம் உண்பது, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin