நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது உடலுறுப்புகளும் தனது செயலை திறம்பட செய்ய வேண்டும். அதிலும் சிறுநீரகம் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் இரத்தத்தில் நச்சுக்கள் கலந்து நமது உடல் ஆரோக்கியமும் கெட்டு விடும். எனவே நமது சீறுநீரக செயலை அடிக்கடி கண்காணித்து வருவது மிகவும் முக்கியம். நம் சிறுநீரகம் சரியாகத்தான் செயல்படுகிறதா என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். உங்கள் உடலில் நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும் மிகப்பெரிய வேலையை செய்வது சிறுநீரகம் தான். இந்த சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடலில் நச்சுக்கள் தேங்கி தூக்கமின்மை ஏற்படும். இன்ஸோமினியா போன்ற தூக்கமின்மை பிரச்சினையால் நீங்கள் அவதிப்படக் கூடும்.

நமது சிறுநீரகம் தான் விட்டமின் டி யை எரித்ரோபயோடினாக மாற்றுகிறது. இந்த எரித்ரோபயோடின் தான் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே நமது சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால் எரித்ரோபயோடின் அளவு குறைந்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியும் குறைந்து விடும். இந்த இரத்த சிவப்பணுக்கள் தான் உடலுறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சப்ளை செய்கிறது. ஆக்ஸிஜன் சரிவர கிடைக்க வில்லை என்றால் தசைகள் மற்றும் மூளைகள் சோர்வடைய ஆரம்பித்து விடும். நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை இருந்தால் 20-25% அனிமியா நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் அறிகுறிகளாவன: சோர்வு, தூக்கம், முகத்தில் வெள்ளை புள்ளிகள் போன்றவை ஏற்படும்.

சிறுநீரகம் நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சி ஆரோக்கியமான உடலை நமக்கு தருகிறது. எனவே சிறுநீரகம் சரிவர செயல்பட விட்டால் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் தாதுக்கள் கிடைக்காமல் சருமத்தில் அரிப்பு மற்றும் வறட்சி ஏற்படும். இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக பாதிப்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்ற தீவிர பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin