உடலை அழகாக பராமரிப்பதில் இருக்கும் கவனம் பாதங்களில் மட்டும் சிதறிவிடுகிறது. பாதங்களில் தான் நம் ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது என்பது தெரியுமா? உடலை அழகாக பராமரிப்பதில் இருக்கும் கவனம் பாதங்களில் மட்டும் சிதறிவிடுகிறது. பாதங்களில் தான் நம் ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது என்பது தெரியுமா? இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில் இருக்கின்றன. இந்த நரம்புகளை அவ்வ போது மசாஜ் போன்று தூண்டும்போது உடலும் மனதும் சேர்ந்து ரிலாக்ஸாகிறது. உடல் அழகைப்பராமரிப்பது போல் பாதத்தின் அழகையும் பராமரிக்க வேண்டும். இதற்கு அழகு நிலையங்கள் தான் தீர்வு என்பதல்ல. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே உங்கள் பாதங்களைச் சுத்தம் செய்து பரா மரிக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து பாத அழகையும் கூட்டி காண்பிக்கும்.

பாதங்களில் இலேசாக தோன்றும் வெடிப்புகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் நாளடைவில் வெடிப்புகள் வெளியே தெரியுமளவுக்கு பெரிதாகும். சிலருக்கு சமயங்களில் பாளம் போல் பெரிதாவதோடு அதில் புண்களையும் ஏற்படுத்தும். மேலும் வலி, எரிச் சல், நமைச்சல் போன்றவையும் உண்டாகி பெரிய அளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்காமல் இருப்பவர்களுக்கு பாதங்களில் உண்டாகும் பிரச்சனை அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

அன்னாசி, பப்பாளி பழங்களையும் கூழாக்கி பாதங்களில் தடவி வந்தால் பாதம் பொலிவாக இருக்கும். அதே போன்று சாம்பார் வெங்காயத்தின் சாறை எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து வெடிப்பு உள்ள இடங்க ளில் பற்றுபோட்டாலும் பாத வெடிப்பு நீங்கிவிடும். குளிக்கும் போது பாதங்களையும் மெல்லிய ப்ரஷ் கொண்டு தேய்த்து குளியுங்கள். குழந்தைகளையும் வளரும் போதே பாத பராமரிப்பு முறைகளைக் கற்றுகொடுத்து பழக்குங்கள். குதிகால் உயர்காலணிகளைத் தவிர்த்து மிருதுவான காலணிகளைப் பழக்குங்கள். இதனால் வளரும் போது குதிகால் வலியைத் தவிர்க்கலாம். அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுப்படுத்துவது போல் பெடிக்யூர் செய்து பாதங்களை அழ காக்கி கொள்ளலாம் என்று நினைக்காமல் வீட்டிலிருக்கும் எளிய பொருள்களைக் கொண்டே உங்கள் பாதங் களைப் பராமரிக்க தொடங்குங்கள். இது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதும் கூட

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin