இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மூலிகைகள் என்றாலே அதில் நிறைய ஆரோக்கிய நலன்கள் அடங்கியிருக்கும். பட்டையின் சிறப்பு என்னவெனில், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பதே ஆகும். இலவங்கப்பட்டை வீட்டு மருந்தாக மட்டுமின்றி அழகை மேம்படுத்த உதவுவதிலும் நல்ல பயன் தருகிறது. எந்த ஒரு நற்குணம் வாய்ந்த மருந்தாக இருந்தாலும், அதை மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் உட்கொள்வது தவறு. அதில் இருந்து இலவங்கப் பட்டை வேறுப்பட்டதல்ல. ஒருவேளை சிலர் ஏதேனும் மருந்துகள் உட்கொண்டு வருபவர்களாக இருந்தால். இலவங்கப் பட்டையை உட்கொள்வதை, உங்களது மருத்துவ ஆலோசகரிடம் பரிசீலித்தப் பின்பு எடுத்துக் கொள்வது நல்லது. சரி வாருங்கள் தற்போது பட்டையில் உள்ள மருத்துவ நற்குணங்கள் பற்றி அறிந்துக் கொள்வோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடல் நோய் மற்றும் அதன் மூலம் வரும் எரிச்சல்களை பட்டையின் மருத்துவ குணம் கட்டுப்படுத்துகிறது. மற்றும் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை இரைப்பை குடலில் தங்கும் நச்சுப் பூச்சிகளை அழித்து இரைப்பை குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. இலவங்கப் பட்டை மூட்டு வலி உள்ள நோயாளிகளுக்கு நல்ல தீர்வளிகிறது. இலவங்க பட்டை எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்வது மற்றும் பட்டையை தேநீரில் கலந்து குடிப்பது போன்றவை நல்ல பயனளிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. போதிய ஆதாரங்கள் இல்லாத போதிலும் பாட்டிக் காலத்து வைத்தியமான இது நல்ல பயனளிப்பதாக கூறப்படுகிறது.

ஈஸ்ட் தொற்று நோய்கள் வரும் போது, தொற்று ஏற்பட்ட இடங்களில் இலவங்கப் பட்டை எண்ணெய்யை உபயோகப்படுத்தினால் நோய் தொற்று குணமாகும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலங்கைப் பட்டை வெகுவாக பயனளிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு இது நல்ல பயன் தருகிறது.

இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி- பாக்டீரியா தன்மை அடங்கி இருப்பதால், இது பாக்டீரியா சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. உங்களுக்கு தேநீர் அருந்தும் பழக்கம் இருந்தால் இனிமேல் இலவங்கப் பட்டை தேநீர் அருந்துங்கள் இது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin