தமிழகத்தில் பொதுவாக காடுகள் மற்றும் சமவெளிகளில் வளரும் மூலிகைகளில் சிறந்த ஒரு மூலிகைச்செடியாக, விராலி விளங்குகிறது. ஹைமெனோடிக்ட்டின் எஸ்ளசும் எனும் தாவரவியல் பெயர்கொண்ட குருஞ்செடியான விராலி, ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள புதர்க்காடுகளில் வறட்சியைத்தாங்கி வளரும் இயல்புடையது. சூரிய ஒளியை நோக்கும் விதமாக, மேல்நோக்கி அமைந்திருக்கும் இதன் இலைகள், எளிதில் அவற்றிலிருந்து சாறு எடுக்க இயலாவண்ணம் வறண்ட இலைகளைக் கொண்டு அமைந்தவை. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னோர்கள், ஆயக்கலைகள் 64 என வகுத்த கலைகளில் ஒன்றான இரச வாதம் எனும் கலை, பொருட்களின் இயல்பான தன்மையை மாற்றி, அவற்றைக்கொண்டு, விலை மதிப்புமிக்க தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் உள்ளிட்ட விலை மதிப்பில்லா பல அரிய பொருட்கள் மற்றும் மனித உடலுக்கு வியாதிகள் அணுகா கற்ப மருந்துகள் தயாரிக்க உதவுவதாகும். அத்தகைய இரச வாதத்திற்கு அடிப்படையான முக்கியமான ஒரு மூலிகைதான் விராலி. சாறே எடுக்க முடியாத விராலி இலைகளிருந்து சாறெடுக்கும் வல்லமையே, இரச வாதத்துக்கு முதல் படி என்பது மட்டுமல்ல, அப்படி விராலி சாறெடுக்கும் வல்லமை மிக்கவரே, சிறந்த சித்த வைத்தியர் என சித்தர்கள் உரைக்கின்றனர்.

இப்படி அரிய ஆற்றல் கொண்ட விராலி இலைகள், அவற்றின் பட்டைகள் மற்றும் விதைகள், எலும்பை வலுவாக்கும், வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும், ஜுரம் போக்கி உடல் சுவாச பாதிப்புகளை சரிசெய்யும் அரும்பெரும் மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும். தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை, தேசமெங்கும் உள்ள மலைக் குன்றுகளின் உச்சிகளில் கோவில்கள் அமைத்து வணங்குவர். அவ்விடங்கள் எல்லாம் சிறப்பான மூலிகைகளை மிக அதிகம் கொண்டு, அவற்றின் பெயராலேயே அழைக்கப்படும். அப்படி மருத மரங்கள் நிரம்பிய குன்றான குமரன் உறையும் மலையே, மருதமலை என ஆகியது. விராலிச் செடிகள் நிறைந்திருந்த, விராலிமலை, முருகக் கடவுளின் திருச்சிறப்புமிக்க திருத்தலமானது.

மருத மரம், மனிதர்க்கு ஏற்படும் இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யும் அற்புத மரமாகும். விராலிச்செடிகள் மனிதர்க்கு உடலில் ஏற்படும் கட்டிகள், வீக்கங்கள் இவற்றை போக்கி, எலும்புகளை வலுவாக்கி, இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக்கும் ஆற்றல் மிக்கது. வியாதி எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகையான விராலி, உடலில் உள்ள நுண்ணிய நச்சு கிருமிகள் மற்றும் ஃபங்கஸ் எனும் பூஞ்சை தொற்றுகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது. சிறுநீரகத்தில் உண்டாகும் சர்க்கரை பாதிப்பை, சரிசெய்யும் தன்மை மிக்கது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin