காட்டாமணக்கு, ஆதளை , அதலை, காட்டுக்கொட்டை, வெள்ளை காட்டாமணக்கு போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. காட்டாமணக்கின் விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டாலும் இதன் இலை, இளம் தண்டு, இளம் கிளைகள், பால், பட்டை, வேர் போன்றவை மருந்தாக பயன்படுகின்றன. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காட்டாமணக்கு மாற்றடுக்கில் அமைந்த கை வடிவ இலைகளை கொண்டிருக்கும். இலைகள் கரும் சிவப்பு நிற துளிகளையும் செந்நிற மலர்களையும் உடைய குறுஞ்செடி. 5 மீட்டர் வரை மட்டுமே வளரக்கூடியது. இது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப நாடுகளில் ஒன்றாக வளரக்கூடியது. இதன் காய் முதிர்ந்த நிலையில் வெடித்து சிதறும் தன்மை கொண்டது. இது பார்க்க ஆமணக்கு விதை போன்று சிறிய வடிவில் இருக்கும். இவை எலியாமணக்கு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இதன் நன்மைகள் என்னென்ன எதற்கு பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

பல், ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கவும். வலுவாக வைக்கவும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்று காட்டாமணக்கின் இளம் தண்டையும் பயன்படுத்தலாம். இதை கொண்டு பல் துலக்கினால் பல் வலி குணமாகும். ஈறுகள் வலுவாக இருக்கும். பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் தடுக்கலாம். பற்களில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. உடலில் ஏற்படும் காயங்கள் குறிப்பாக புண்ணின் மீது வடியும் இரத்தக்கசிவுக்கு இவை மருந்தாகும். காட்டாமணக்கு செடியிலிருந்து இலைக்காம்பு மற்றூம் இளம் தண்டுகளில் இருந்து வெளிப்படும் பாலை புண்ணின் மீது கட்டினால் புண்ணில் வடியும் இரத்தக்கசிவு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும். இது பூஞ்சை மற்றூம் பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.

மூட்டுவலிகள் மற்றும் கீல்வாதம் பிரச்சனைகள் இருப்பவர்கள் காட்டாமணக்கு விதை எண்ணெய் உடன் தைலம் சேர்த்து பூசி வந்தால் வலி அடங்கும். கீல்வாதம் இருப்பவர்கள் வெளிப்பூச்சாக பாலை பூசி வந்தால் வீக்கம் குறையும். வலி படிப்படியாக குறையும். தொழு நோய் இருப்பவர்களுக்கு இதன் பட்டையை நீர் சேர்த்து காய்ச்சி கொடுத்தால் தொழுநோய் கட்டுப்படும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin