நமது நாட்டின் பாரம்பரிய உணவு தயாரிப்பில் எண்ணெய் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாதது. நாம் அன்றாட உணவில் சாப்பிடுவதற்கு பல வகையான எண்ணெய் இருக்கின்றன. அதில் வெகு சிலர் மட்டுமே மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் எண்ணையாக கடுகு எண்ணெய் இருக்கிறது. இந்த கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடுகு எண்ணெய் ஒரு பசி ஊக்கியாக செயல்படுகிறது. நமது உடலின் வளர்ச்சிதை மாற்றதிறனை அதிகரித்து ஜீரண சக்தியை மேம்படுத்தி பசியை தூண்டுகிறது. பசியுணர்வு குறைவாக உள்ள நபர்கள் அடிக்கடி கடுகு எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பசியுணர்வு அதிகம் தூண்டப்பட்டு உணவுகளை சாப்பிடும் ஆர்வம் உண்டாகும். பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் கடுகு எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்களை அவ்வப்போது சிறிதளவு சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.
உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை கடுகு எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது. காயங்களால் உடலில் அழுத்தமான தழும்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அந்த இடங்களில் கடுகு எண்ணையை தடவி வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
நாம் வெறுங்கால்களோடு நடப்பதால் பூமியில் இருக்கும் சில கிருமிகள் தொற்று சிலருக்கு ஏற்படுவதால் பாத புண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது கடுகு எண்ணையை மேற்கூறிய இடங்களில் தடவி வந்தால் போதும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .