நம்ம எல்லோருக்குமே டீ போட தெரியும். சிலபேர் வீட்டில் மசாலா டீ யையும் போடுவார்கள். ஆனால், அந்த டீயை, சின்னச் சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணி போட்டீங்கன்னா, அதன் சுவையும், மணமும் அதிகரிக்கும். நீண்ட நேரம் தொண்டையிலும், நாவிலும் சுவை நிலைத்திருக்க, இப்படி ஒருவாட்டி உங்க வீட்ல, டீ போட்டு பாருங்க! திரும்பத் திரும்ப இப்படியே டீ போடுவிங்க! டீ, சுத்தமா பிடிக்காதவங்க கூட, இந்த வாசத்துக்கு டீ குடிப்பாங்க. அவ்வளவு சுவையான டீயை எப்படி போடுவது? தெரிந்து கொள்ளலாமா? இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் டீ போடும் பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் அளவு, தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு விடுங்கள். அந்த தண்ணீர் கொதிப்பதற்குள், டீ க்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இஞ்சி – 2 சிறிய துண்டு, பட்டை – 2 துண்டு, ஏலக்காய் – 3, லவங்கம் – 2, மிளகு – 5. இந்தப் பொருட்களையெல்லாம் எடுத்து சிறிய உரலில் போட்டு, நன்றாக பொடியாக இடித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் வைத்து இருக்கும் தண்ணீர் கொதி வந்ததும், அந்தத் தண்ணீரில் பொடியாக இடித்து வைத்திருக்கும் இந்த மசாலா பொருட்களை சேர்த்து, மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இந்த இடத்தில் டீக்கு தேவையான பாதி அளவு சர்க்கரையை போட்டுக் கொள்ளுங்கள். (இது ஒரு டிப்ஸ்) டீ மசாலா கொதிக்கும்போது, சர்க்கரையை சேர்த்தால், டீ ரெடியாகும் இறுதி சமயத்தில், ஆத்தும் போது, சீக்கிரமாகவே நுரை பொங்கி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெந்நீரில், மசாலாக்கள் இரண்டு நிமிடம் வெந்த பிறகு, ஒரு டம்ளர் அளவு பால் சேர்க்க வேண்டும். பால் சேர்த்தவுடன், டி மிதமான தீயில் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை, நன்றாக கொதிக்க வேண்டும். (எப்போதுமே மசாலா தண்ணீரில், ஊற்றக்கூடிய பால், ஆறிய பாலாகத்தான் இருக்க வேண்டும். சுடு பாலை ஊற்ற கூடாது. இது ஒரு டிப்ஸ். ஆரிய பால் மசாலா டீ தண்ணீரோடு சூடாகி கொதித்தால் சுவை அதிகரிக்கும்.)

இப்போது டீயை வடிகட்டி கொள்ளுங்கள். ஏற்கனவே பாதி அளவு சர்க்கரையை, மசாலா தண்ணீரில் சேர்த்து விட்டோம். மீதம், உங்களுக்கு எவ்வளவு சர்க்கரை தேவைப்படுகிறதோ அதை டீயுடன் சேர்த்து நன்றாக தூக்கி, நுரை வரும் அளவிற்கு ஆத்தி, பருகிப் பாருங்கள்! இந்த டீயின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (1 1/2 டம்ளர் தண்ணீருக்கு, 1 டம்ளர் பால் சேர்ப்பது சரியாக இருக்கும். உங்களுக்கு டீ திக்காக இருக்க வேண்டும் என்றால், 1 டம்ளர் தண்ணீருக்கு, 1 டம்ளர் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான்.) இந்த டீ யை பால் சேர்க்காமல், பிளாக் மசாலா டி ஆகவும் பருக முடியும். மசாலா தண்ணீரோடு பால் சேர்ப்பதற்கு முன்பாகவே, அந்த மசாலா தண்ணீரை ஒரு கப்பில், பாதி அளவு வடிகட்டி கொள்ளுங்கள். ‌ மீதி பாதி அளவு கொதிக்கின்ற தண்ணீரை ஊற்ற வேண்டும். அதோடு நான்கு சொட்டு எலுமிச்சை பழச்சாறை பிழிந்து, இரண்டு புதினா இலைகளை சேர்த்து, சர்க்கரையோ அல்லது தேன் கலந்து குடித்தீர்கள் என்றால், சுவையான ‘மசாலா பிளாக் டீ’ தயார்! உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை, இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி டீ போட்டு பாருங்க.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin