நம்ம வீட்ல எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மாவை ஆட்டி வைத்தாலும், ஹோட்டலில் சுடுவது போல இட்லி வரவில்லை என்ற கம்ப்ளைன்ட் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், நம் வீட்டிலும், ஹோட்டலில் சுடுவது போன்ற வெள்ளையான, பஞ்சுபோல புசுபுசுன்னு இட்லி கட்டாயம் சுட முடியும். இந்த அளவில் இட்லி மாவு ஆட்டி பாருங்க! இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க! ஒருவேளை உங்களுடைய மாவு பதம், தவறிவிட்டால் கூட, அதை சரி செய்ய ஒரு ஐடியா உள்ளது. அதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இட்லிக்கு அரிசியை எந்த டம்ளரில் அளக்கிறீர்களோ, அதே டம்ளரில் கட்டாயம் உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன்தான் எடுக்க வேண்டும். வெந்தயம் அதிகமாகி விட்டாலும், இட்லி தண்ணீர் விட்டு கொழகொழவென்று ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. அரிசி அளக்கும் டம்ளரிலேயே பாதி அளவு சாதம் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி நன்றாக 6ல் இருந்து 7 முறை கழுவவேண்டும். உங்களால் முடிந்தால் 10 முறை கழுவினாலும் தவறில்லை. ஹோட்டலில் இட்லி வெள்ளையாக வருவதற்கு இதுதான் காரணம். இட்லி அரிசி கட்டாயம் 6ல் இருந்து 7 மணி நேரம் ஊற வேண்டும்.

வெந்தயத்தை, இட்லி அரிசி ஊற வைக்கும் போதே தனியாக ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்தோடும் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டாம். அரிசியோடு சேர்த்து வெந்தயத்தை ஊற வைக்க வேண்டாம். உளுந்தை ஒரு தனி பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரை ஊற்றி தான் உளுந்து ஆட்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றி விட கூடாது. உளுந்து ஒரு மணி நேரம் வரை ஊறினால் போதும்.

இட்லி ரொம்ப கல்லு மாதிரி இருந்துச்சுன்னா, உங்க வீட்டில அப்பளம் இருக்கும் இல்லையா? உளுந்து அப்பளம். அத நான்கு அப்பளம் எடுத்து, தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைச்சுக்கோங்க. தேவையான அளவு இட்லி மாவை சின்ன பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. அரைச்ச அப்பளத்தை, இட்லி மாவுடன் சேர்த்து கலக்கி இட்லி சுட்டா, கல்லு இட்லியும், சாஃப்ட் இட்லியா மாறிவிடும். இது மட்டும் ஃபாலோ பண்ணி இட்லி சுட்டு பாருங்க பதம் தப்பவே தப்பாது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin