இந்து மதத்தின் முதல் நூல்களான 4 வேதங்களில் 4வது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை செய்தல் மிக நல்லது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும், கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும். அந்த வகையில் 2020ம் ஆண்டு பலரை மோசமடைய செய்தது. வீடு கட்ட கூலி ஆட்கள் கிடைக்காமலும், மணல் பிரச்சனை என பல தடங்கல்கள் இருந்தது எனவே வருகிற 2021ம் ஆண்டில் வீடு கட்ட பின்வரும் வாஸ்து டிப்ஸ்கள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

இந்தப் பிரபஞ்சமே நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் வீடு கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் அமைப்பு எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது வீடு கட்டும் இடத்தில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து சாஸ்திரம்.

ஒரு மனையின் மையப்பகுதியான பிரம்மஸ்தானத்தில் தேவர்கள் வசிப்பதாக வாஸ்து சொல்கிறது. அதனால், பழைய காலங்களில் வானம் பார்த்த வகையில் பிரம்மஸ்தானத்தை திறந்த வெளியாக விடப்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டன. அத்தகைய பெரிய வீடுகள் இன்றும் கிராமப்புறங்களில் இருப்பதை பலரும் கவனிக்கலாம். அவை தொட்டி கட்டு வீடுகள் என்று அழைக்கப்பார்கள். அந்த வீடுகளின் அமைப்புப்படி நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் எளிதாக கிடைத்தன. ஒரு மனையின் பிரம்மஸ்தானத்தை கண்டறிய மூன்று விதமான வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin