வீட்டை பராமரிக்கும் போது வீட்டில் இருக்கும் பொருள்களையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அவை சமயத்தில் மிகப்பெரிய விபரீதத்தை உண்டு செய்துவிடும் அத்தகைய ஆபத்து நிறைந்தது அத்தியாவசிய பொருளாய் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது சிலிண்டர் பயன்பாடும் இதை எப்படி பாதுகாப்பாக கையாள்வது பார்க்கலாமா? இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சிலிண்டர் பயன்பாடு நிறைந்திருக்கிறது. அன்றாட பயன்பாட்டில் சிலிண்டர் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்னும் மன நிலையில் தான் பல பெண்கள் இருக்கிறார்கள். அடுப்புக்கு மாற்றாக வந்த சிலிண்ட ருக்கு பிறகு இண்டக்‌ஷன் ஸ்டர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், அவன் என பல கண்டுபிடிப்புகள் சமையல் செய்வதற்கு இருந்தாலும் இன்றுவரை சிலிண்டரை விட சிறந்தது என்ற பெயரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் இத்தகைய கண்டுபிடிப்புகள் அதிகரித்துவந்தாலும் கூட சிலிண்டரின் பயன்பாடு அதிகரித்துதான் வருகிறது. பயன்பாட்டுக்கு ஏற்ப இதில் ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. பயன்படுத்துவதற்கு எளிதானது. அனைவராலும் எளிதாக கையாளமுடியும் என்றும் சொல்லலாம். ஆனாலும் சமயத்தில் விபத்தை ஏற்படுத்திவிடவும் செய்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அவ்வபோது நடக்கிறது. கோடிக் கணக்கான மக்கள் சிலிண்டரை பயன்படுத்தும் நிலையில் பல நேரங்களில் விபத்து சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் இது குறித்து பாதுகாப்பான விழிப்புணர்வை கொடுக்கிறார்கள். எனினும் சிலர் அறியாமல் சில தவறுகளை செய்துவிடுவதும் உண்டு. சிலிண்டரை உபயோகப்படுத்துபவர்கள் அதை பராமரிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பதும் இதற்கு ஒருவித காரணமாக சொல்லலாம்.

சமையல் அறையில் சிலிண்டரை வைக்கும் போது அந்த அறையில் மின்சாதன பொருள் களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மின்சாதன பொருள்களில் எப்போ தேனும் ஏற்படும் மின் அழுத்த ஏற்றதாழ்வில் சிலிண்டரிலும் கசிவை உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. ஒரு சிலிண்டருக்கு அருகிலேயே இன்னொரு சிலிண்டரை வைக்க வேண்டாம். தற்போது மாடுலர் கிச்சன் என்ற பெயரில் சிலிண்டரை மரத்தால் ஆன கபோர்டு இருக் கும் இடத்தில் வைத்து மூடிவிடுவார்கள். இதனால் சிலிண்டரில் இருந்து வாயு கசிந்தாலும் அது வெளியே தெரிவதில்லை. அதனால் சிலிண்டரை காற்றோட்டமான இடத்தில் நிற்க வைக்க வேண்டும். சிலர் சிலிண்டரை செங்குத்தாக வைப்பதும் கூட விபத்துக்கு காரணமாகிவிடக்கூடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin