நாம் வீடு முழுவதையும் அடிக்கடி சுத்தம் செய்தாலும், அதை விட மிக முக்கியமாக சுத்தம் செய்ய வேண்டிய ஒரு இடம் என்பது கழிவறை ஆகும். எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டை நீங்கள் மாதம் ஒருமுறை சுத்தம் செய்தாலும், கவலை இல்லை ஆனால் கழிவறை மற்றும் கழிவறையில் இருக்கும் பொருட்களை கண்டிப்பாக அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் இதன் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. அது மட்டும் அல்லாமல் துர்நாற்றத்தையும், அசைவுகரியத்தையும் ஏற்படுத்தும் இந்த ஒரு செயலை இனியும் செய்யாதீர்கள்! இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கழிவறைக்குள் நுழைந்தால் அங்குள்ள கழிவறை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் துர்நாற்றம் வீசாமல் நல்ல நறுமணம் வீசக்கூடிய பொருட்களையும் வாங்கி வைப்பீர்கள் ஆனால் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிரஷ் போன்றவற்றை ஒருபோதும் நாம் சுத்தம் செய்வது கிடையாது. இதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிதாக மாற்றி விட வேண்டும். நீண்ட காலம் வைத்திருக்கக் கூடாத ஒரு பொருளாகவும் கழிவறை பிரஷ் இருந்து வருகிறது.

கழிவறைக்கு பயன்படுத்தும் பிரஷ்சை குளியல் அறைக்கும் சிலர் பயன்படுத்துவது உண்டு. இது போல ஒரே பிரஷ்சை இரண்டு இடங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. அதற்கென தனியாக பிரஷ்கள் வைத்திருக்க வேண்டும். கழிவறையில் உபயோகிக்கும் பிரஸ் ரொம்பவே அசுத்தமானதாக இருக்கும். நீங்கள் என்னதான் தண்ணீர் ஊற்றி கழுவினாலும் அதில் இருக்கும் நுண்கிருமிகள் பேராபத்தை கொடுக்கக் கூடியதாக இருந்து வருகிறது எனவே கழிவறை பிரஷ்சை கண்டிப்பாக அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதை எப்படி சுத்தம் செய்யலாம்?

சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் கழிவறை பிரஷை சுத்தம் செய்த பின்பு போட்டு வையுங்கள். இதனால் கிருமிகள் நோய்களை உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அழிந்து விடும். மேலும் அதற்கு முன்பாக சிறிதளவு வினிகரை பிரஷ் முழுவதும் ஊற்றி ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து வேறொரு பிரஷால் இந்த பிரஷர்களுக்கு இடையில் லேசாக தேய்த்து கழுவுங்கள். கையை நேரடியாக பிரஸ்ஸில் வைக்க வேண்டாம். ஏதாவது ஒரு கையுறை போட்டுக் கொண்டு பிரஷை தொடுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin