நம்மிடம் இருக்கும் எல்லா நகைகளும் தங்கமாக இருப்பது இல்லை. ஒரு சில நகைகள் கோல்டு கவரிங்கில் கண்டிப்பாக வைத்திருப்போம். அது மட்டுமில்லாமல் எல்லோராலும் தங்க நகையை வாங்கி விடவும் முடியாது. அவர்கள் கோல்ட் கவரிங் நகைகளை நீண்ட நாட்கள் பத்திரப்படுத்த வேண்டும். தங்கத்தைப் போலவே மின்ன செய்யக்கூடிய கோல்ட் கவரிங் நகைகள் அடிக்கடி கறுத்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு. இப்படி கறுத்து போன கோல்ட் கவரிங் நகைகளை 10 பைசா கூட செலவு செய்யாமல் எப்படி வீட்டிலேயே புத்தம் புதிய நகை போல பளிச்சிட வைக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உமா கோல்ட் அல்லது கோல்ட் கவரிங் என்று அழைக்கப்படும் இந்த கவரிங் நகைகளில் சிறிதளவு தங்கம் சேர்ப்பது உண்டு. இதனால் நீண்ட நாட்களுக்கு தங்கம் போலவே பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகு கோல்ட் கவரிங் நகைகள் உப்பு காற்று அதிகம் பட்டால் மிக விரைவாக கறுத்து விடும். கவரிங் நகையாக இருந்தாலும், தங்க நகையாக இருந்தாலும் கறுத்து போனால் இப்படி நீங்கள் செய்து பாருங்கள். மீண்டும் புதிய நகை போல மாறிவிடும். இதற்காக வெளியில் காசு கொடுத்து பாலிஷ் போட வேண்டிய அவசியம் இல்லை.

முதலில் ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் இருக்கும் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் கறுத்து போன நகையை அந்த எலுமிச்சை சாற்றில் 15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். எல்லா இடங்களிலும் எலுமிச்சை சாறு படும்படி ஸ்பூன் அல்லது கரண்டியை பயன்படுத்தி திருப்பி விடுங்கள். 15 நிமிடம் நன்கு ஊறிய பிறகு நகைகளில் இருக்கும் அழுக்குகள், தூசுகள் அனைத்தும் எலுமிச்சை சாற்றில் இறங்கிவிடும்.

அதன் பிறகு நகையை எடுத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை சாறை வடிகட்டி சேருங்கள். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பை பற்ற வைத்து லேசாக சூடேற்றங்கள். ரொம்பவும் கொதித்து விடக்கூடாது. மிதமான சூட்டில் அடுப்பை அணைத்து விடுங்கள். எலுமிச்சை சாறு கலந்த இந்த தண்ணீரில் கறுத்துப் போன நகைகளை போட்டு சூடேற்றம் செய்யும் பொழுது மீதம் இருக்கும் அழுக்குகளும் முழுமையாக நீங்கிவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin