நமது நாட்டில் பல வகையான தானியங்கள் பயிர்செய்யப்படுகின்றன. அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவு தானியங்கள் தவிர்த்து சமையல் எண்ணெய், இன்ன பிற உணவு பொருட்கள் தயாரிப்புக்காகவும் பல வகையான தானியங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. அந்த வகையில் சமையல் எண்ணெய் தயாரிக்கவும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை புரியும் ஒரு தானியமாக “எள்” இருக்கிறது. வெள்ளை எள், சிவப்பு எள், கருப்பு எள் என எள்ளில் பல வகைகள் உள்ளன. எந்த வகையான எள் சாப்பிட்டாலும் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எள் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும். மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது.

எள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் தொடர்ந்து மூலம் போக்க முடியும். ஒவ்வாமை, சுற்று சூழல் மாசு மற்றும் இன்ன பிற காரணங்களாலும் சிலருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த ஆஸ்த்மாவாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

எள் புரத சத்தை தன்னகத்தே அதிகம் கொண்டது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin