முடி உதிர்வு, பொடுகுத்தொல்லை, முடி வெடிப்பு, செம்பட்டை நிறம், அடர்த்தியின்மை என எல்லாவற்றையும் போக்கும் குணம் சீயக்காய்க்கு உண்டு. எல்லாமே ஈஸியாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். அது தங்கள் ஆரோக்கியம் குறித்ததாக இருந்தாலும் சரி, அழகு குறித்ததாக இருந்தாலும் சரி, ஆனால் ஆரம்பத்தில் அலட்சியம் செய்த பிறகு குறைபாட்டுக்கு பிறகு கடுமையான பராமரிப்புக்கு மாறுகிறார்கள். அதில் மிக முக்கியமானது அழகு சம்பந்தமான குறிப்புகள் தான். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் முக்கியமானது கூந்தல். கூந்தல் பராமரிப்பு எளிதாக இருக்க ஷாம்புதான் பெஸ்ட் என்பவர்கள் சில வாரங்கள் சீயக்காய் பயன்படுத்தினால் பிறகு சீயக்காய் மட்டுமே விரும்புவார்கள். இதை பயன்படுத்திய பிறகு உங்கள் கூந்தலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா? கூந்தலில் பொடுகு என்பது அதிகரித்துவர காரணமே கூந்தலுக்கு ஒவ்வாத பொருள்கள், அல்லது போதுமான பராமரிப்பின்மையால் தான். ஆனால் சீயக்காய் பயன்படுத்தும் போது அது பூஞ்சை காளான் பண்புகளை கொண்டிருப்பதால் அது பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் பொடுகு பிரச்சனையால் கூந்தல் மயிர்க்கால்களில் நுண்ணறை அடைப்பு முடி வளர்ச்சி போன்றவை தடுக்க காரணமே பொடுகு தான். இது பொடுகோடு கூந்தலில் வறட்சி மற்றும் அரிப்பையும் உண்டாக்குகிறது. பொடுகு அதிகரிக்கும் போது அது தலைப்புண்களையும் உண்டாக்குகிறது. உங்களுக்கு பொடுகு இருந்தால் நீங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சீயக்காய் மட்டுமே கூந்தலுக்கு பயன்படுத்திவந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். அதை உணரவும் செய்வீர்கள்.

கூந்தலை சுத்தமாக வைத்திருப்பதும் கூட முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும். பெருகி வரும் மாசு, தூசு போன்றவையும் கூந்தலின் மீது அழுக்கை தேக்கி வைக்கும். இந்த அழுக்கை நீக்கும் தன்மை சீயக்காய்க்கு உண்டு. சீயக்காய் இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படக்கூடியவை. ரசாயனம் கலந்த ஷாம்புவை காட்டிலும் சீயக்காய் சிறப்பாகவே கூந்தலுக்கு நன்மை தரும். சீயக்காயில் இருக்கும் பிஹெச் அளவு குறைவு. இது உச்சந்தலையில் மிதமான மென்மையை அளிக்க கூடியவை.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin