செடி வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் முதலில் தேர்ந்தெடுப்பது என்னவோ பூச்செடியாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ரோஜா செடி என்றால் எல்லோருக்கும் விருப்பமான ஒரு செடியாக இருக்கும். இந்த ரோஜா செடியை வளர்க்க விரும்புபவர்கள் முதலில் தொட்டியில் மண்ணை நிரப்புவதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்? என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு செடியும் கொத்துக் கொத்தாக பூக்க இதையும் தெரிஞ்சுக்கலாமே! இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் மண் கலவை பாதி மற்றும் ‘கோகோ பீட்’ எனப்படும் தேங்காய் நார் கலவை பாதி என்று சேர்ப்பது ரோஜா செடிக்கு நல்ல ஊட்டசத்து கொடுக்கும் ஒரு மண் கலவை ஆகும். நீங்கள் செடி வைக்க ஏற்பாடு செய்து வைத்துள்ள தொட்டியில் பாதி அளவிற்கு மண்ணும் மீதி அளவிற்கு தேங்காய் நாரை நன்கு காய வைத்து பொடியாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது நர்சரிகளில் வாங்கியும் சேர்க்கலாம். இரண்டையும் கலந்து ரோஜா செடியை நட்டு வையுங்கள். 10 நாட்களில் செடி துளிர் விட்டு முளைக்க ஆரம்பித்துவிடும்.

பின்னர் இந்த ரோஜா செடியில் ஒரு கிளையில் சில ரோஜா பூக்கள் முளைத்ததும் பூக்களைப் பறிக்க மனமில்லாமல் அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மற்ற சில கிளைகள் வராமல் போய்விடும். எனவே செடிகளில் பூக்கும் பூக்கள் முதிர்ந்த பின் அவ்வபோது பறித்து விட வேண்டும். மேலும் அதிகம் பூத்த கிளைகளை வெட்டி விட வேண்டும் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். அப்போது தான் புதிய கிளைகள் தடையின்றி வளரும்.

அது மட்டுமல்லாமல் நீங்கள் உருளைக்கிழங்கு வேக வைத்து அதன் தோல் பகுதியை தூக்கி எறிந்து விடாமல் அதனை உங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு போட்டு பாருங்கள், ரொம்பவே சூப்பராக செடிகள் பூத்துக் குலுங்கும். மண்புழு விவசாயத்திற்கு சிறந்த நண்பன் என்று கூறக் கேட்டிருப்போம் எனவே மாதம் ஒரு முறையாவது மண்புழு உரம் வாங்கி போடுவது ரொம்பவே சிறப்பான பலன்களை கொடுக்கும். அவ்வபோது தண்ணீரை தெளித்து, மண்ணை ஈரப்பதத்துடன், நல்ல காற்றோட்டத்துடன் வைத்து இவ்வகையில் பராமரித்து வந்தாலே கொத்துக் கொத்தாக பூக்களை அள்ளலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin