அன்றாட சமையலில் சேர்த்து வரும் மிகச்சிறிய அளவிலான விதை தான் எள். இந்த எள்ளு வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும். இந்த எள்ளு ஆசியாவில் உணவுப் பொருட்களின் மேல் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. சரி, நாம் உணவில் சேர்த்து வரும் எள்ளு நம் உடலுக்கு நல்லதா? ஆம், எள்ளு விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த சிறிய விதையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இது உலகிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த சிறிய எள்ளு விதைகளை லேசாக வறுத்து உணவில் சேர்த்தால், அந்த உணவுப் பொருள் மிகவும் சுவையாக இருக்கும். இதனை பச்சையாக அப்படியே கூட சாப்பிடலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் என இரண்டு வகைகள் உண்டு, இந்த எள் வகைகளில் நாம் அதிகம் பயன்படுத்துவது கருப்பு எள்ளினைத் தான். அத்தகைய எள்ளில் உள்ள சத்துகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். கருப்பு எள் மாதவிடாய் நின்ற பெண்களின் உடலினை வலிமைப்படுத்துவதாக உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு கால்சியமானது எலும்பு மற்றும் பல்லின் வலிமையினை அதிகரிப்பதாக உள்ளது.

எள் இதயத்தினை அனைத்து விதமான நோய்களில் இருந்து தற்காத்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் கருப்பு எள்ளினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலின் இரும்புச் சத்து அதிகரிக்கும். இரும்புச் சத்து அதிகரித்தால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான நுனி முடி வெடித்தல், இளநரை, முடி கொட்டுதல், செம்பட்டையான தலைமுடி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது.

சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin